மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளம் நுகர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.இந்த புத்தாக நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அர்ச்சனா முன்னிலை வகித்தனர். மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
அப்போது மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்து புத்தாகப்பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன்,உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பிரவீன் குமார்,முதுநிலை மண்டல மேலாளர் நளினி,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தனி வட்டாட்சியர்கள் நன்றி கூறினர்.

0 Comments