தாட்கோ மூலம் அழகுகலை பயிற்சி..... இளைஞர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  


தேனி மாவட்டம், தமிழ்நாடு  ஆதிதிராவிடர்  வீட்டுவசதி மற்றும்  மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  தனியார்  நிறுவனத்துடன்  இணைந்து  ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியின   இளைஞர்களுக்கு  அழகுக்கலை  மற்றும்  சிகை  அலங்காரம்  (Cosmetology  & Hair  Dressing  Courses) பயிற்சி  வழங்க உள்ளது இப்பயிற்சியினை   பெற  தாட்கோ இணையதளமான  (www.tahdco.com)  என்ற   முகவரியில்  விண்ணப்பிக்கலாம்.     

இப்பயிற்சியினை  பெற   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின   இனத்தை சார்ந்த  எட்டாம்  வகுப்பு  முதல்   பனிரெண்டாம்  வகுப்பு   வரை  படித்தவர்களாகவும்,                     18  முதல் 35  வயதிற்குட்பட்டவர்களாகவும்,  குடும்ப  வருமானம்   ஆண்டிற்கு   ரூ.3.00 லட்சத்திற்குள்   இருக்க வேண்டும்.   மேலும் சென்னையில்   தங்கும்  படிப்பதற்கு விடுதி,  உணவு  உள்ளிட்ட   செலவினம்  தாட்கோ  மூலமாக  வழங்கப்படும்.  

இப்பயிற்சிக்கான  கால  அளவு  45  நாட்கள்   ஆகும்.      இப்பயிற்சியினை  முழுமையாக   முடிக்கும்  இளைஞர்களுக்கு  இந்திய  தேசிய  திறன்  மேம்பாட்டு  நிறுவனத்தால் (NSDI -  National  Skill  Development of India )  அங்கீகரிக்கப்பட்ட  தரச்சான்றிதழ்  வழங்கப்படும்.   இப்பயிற்சியினை   வெற்றிகரமாக  முடிக்கும்  இளைஞர்கள்  தனியார்  அழகு நிலையங்களில்  ஆரம்ப  கால  மாத  சம்பளமாக   ரூ.10,000/-  முதல்  ரூ.20,000/-  வரை பெறலாம். 

மேலும், கூடுதல்  விவரங்கள்   அறிய  மாவட்ட மேலாளர்,  தாட்கோ,அறை  எண்.73,  மாவட்ட ஆட்சியர்   அலுவலகம்,  தேனி என்ற முகவரிக்கு நேரில் அல்லது 94450 29480 என்ற தொலைப்பேசி  எண்ணில்  தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஞ்ஜீத்சிங்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments