கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி உள்பட இரண்டு பேர் கைது
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யபட்டு வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஞ்சிக் கோவில் பகுதியில் தீவிர சோதனை நடத்தியதில், குட்டைக்காடு அடுத்த அப்புசாமி தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் காஞ்சிக்கோவில் பெத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பதும், மற்றொருவர் பெத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பதும் தெரியவந்தது.
மேலும், சுரேஷ்குமார் திமுகவில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பெத்தாம்பாலையம் பேரூராட்சியின் 3வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 7 லிட்டர் கள்ளசாராயமும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராய விவகாரத்தில், ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பிரமுகரே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments