தேனியில் அண்ணா விரைவு சைக்கிள் போட்டியினை கலெக்டர் துவக்கி வைத்தார்

 


தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் விலக்கிலிருந்து அண்ணா விரைவு சைக்கிள் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்   ரஞ்ஜீத் சிங் நேற்று (27.09.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம்  மூலம்  மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் தேனி மாவட்டத்தில் அண்ணா விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டி 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும்,  மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15  வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும்,  மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும்,  மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் என ஆறு பிரிவுகளில்  நடத்தப்பட்டது.  

இப்போட்டி  அரண்மனைப்புதூர் விலக்கில் தொடங்கி, கம்மவார் கல்லூரி சாலை வழியாக சென்று, வெங்கடாசலபுரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கில் நிறைவு பெற்றது.  இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments