திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் இரண்டாம் கட்டமாக 8 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை,முதியோா் உதவித் தொகை, பிறப்புச் சான்றிதழ், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான அரசாணையினை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதில் ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி,செயல் அலுவலர் அபூபக்கர், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன், மாவட்ட அவைத் தலைவர் பகலவன்,ஆரணி பேரூர் செயலாளர் முத்து, பொருளாளர் கரிகாலன், அவைத்தலைவர் ரமேஷ், வார்டு கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரகுமான் கான்,பொன்னரசி உள்ளிட்ட நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ் பிரபா, மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




0 Comments