ஆரணியில் புதிய மின்மாற்றியை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் துவக்கி வைத்தார


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட மூலிகை தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்னழுத்தம் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி  வந்தனர்.இந்த நிலையில் அண்மையில் ஆரணியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகரிடம் மூலிகை தெருவில் நிலவை வரும் மின்னழுத்தம் குறைபாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய எம்.எல்.ஏ இப்பிரச்சனைக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்திருந்தார். இதனை அடுத்து அப்பகுதியில் சுமார் 5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பொன்னேரி கோட்ட பொறியாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி தொடக்கி வைத்தார்.இதில் ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து, மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் ரோஸ் பொன்னையன், பொருளாளர் கரிகாலன்,பஞ்செட்டி உதவி செயற்பொறியாளர்கள் பெருமாள், பன்னீர்செல்வம் ஆரணி உதவி பொறியாளர் விஸ்வநாதன், முகவர்கள் கதிரேசன், எல்லப்பன்,வணிக உதவியாளர் ரகுபதி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments