நாகையில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம் அஞ்சலி


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சியும், உடல் தானம் வழங்க ஒப்புதல் நிகழ்வும் இன்று ( 12.09.25 ) நாகப்பட்டினம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. 

கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, நகரச் செயலாளர் வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும் கட்சி உறுப்பினர்கள் யெச்சுரி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 12 தோழர்கள் உடல்தானம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்து உரிய விண்ணப்பத்தை மாவட்டச் செயலாளரிடம் அளித்தனர்.



Post a Comment

0 Comments