ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, மொடக்குறிச்சி பேரூராட்சி, வார்டு எண்.13, ஆலாங்காட்டுவலசு, நேரு வீதி பகுதியில் கான்கிரீட் சாலை, சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கவும், வார்டு எண்.7, செலம்பகவுண்டம்பாளையம், நேரு வீதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கவும், வார்டு எண்.8, அம்மன் நகர் பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்(2025-26) இருந்து ரூபாய் 28.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை செய்தல் நிகழ்வானது . அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, கான்கிரீட் சாலை, சிறுபாலம் மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி, ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவசங்கர், மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் முனைவர் கே. பிரகாசம், முன்னாள் மாநில விவசாய அணி திட்ட குழு உறுப்பினர் பாலக்குமார், மண்டல் பொதுச் செயலாளர் குமரவேல், பொருளாளர் பிரபாகரன், 7 வது வார்டு கவுன்சிலர் சத்யாதேவி சிவசங்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் M.செல்வகுமார், முன்னாள் பொதுச் செயலாளர் P.பாலன், முன்னாள் பொருளாளர் கணேசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கிருஷ்ணசாமி, கார்த்திகா பிரகாசம், தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் K.கார்மேகம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள்,அஇஅதிமுக மொடக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் ரவி மற்றும் கழக நிர்வாகிகள்,உள்ளூர் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471, 6382211592 .
0 Comments