நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பாஜகவில் மாநில பதவி
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக கட்சியில் உள்ள 25 அணிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அண்ணாமலைக்கு பிறகு தென் மாவட்டங்களில் செல்வாக்கு நிறைந்த முக்கிய புள்ளியாக திகழ்ந்த நயினார் நாகேந்திரனுக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மகனுக்கு தற்போது தமிழக பாஜகவில் மாநில அளவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது. மேலும் இது தமிழக மற்றும் பாஜக வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments