தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வைகை சாலை சந்திப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெள்ளி விழாவை நோக்கி 24 ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. தேனி திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவரும், பெரியார் குருதி கொடை கழக தலைவருமான ஸ்டார் நாகராஜ் தலைமை தாங்கினார் .பொதுக்குழு உறுப்பினர் (பெரியகுளம்) அன்புக்கரசன், வெற்றி தமிழர் பேரவை தலைவர் மணி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மணியம்மை மழலையர் பள்ளி தாளாளரும் ,தந்தை பெரியார் குருதிக்கொடை கழக புரட்சி பாவலர் மன்றம் மதுரை சார்பாக நெறியாளர் வரதராஜன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் ஸ்டார் ஜீவா ,ஹரி விஸ்வநாதன், தனுசு ஆகியோர் முதல் குருதிக்கொடை வழங்கினார்கள். நிர்வாகிகள் ஆண்டிச்சாமி ,திராவிடர் கழக மணிகண்டன், குட்டி ,அன்னக்கொடி, ஓசூர் கிருஷ்ணன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பு பணிகளை செய்து இருந்தனர். முகாமில் அப்பா ,அம்மா பிள்ளைகளோடு வருவது, தாத்தா பேரன்களோடு வருவது, ஆண்டிபட்டியில் அனைத்து வணிகர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வந்திருந்து குருதிக் கொடை வழங்கியதும், தேனி மாவட்டம் மட்டுமன்றி, மதுரை மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வலராக வந்திருந்து குருதிக்கொடை வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது.
குருதி சேமிப்பு பணியை மதுரை ராஜாஜி மருத்துவமனையைச் சேர்ந்த குளு, குளுவென்ற நவீன வசதிகளுடன் கூடிய பேருந்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர். குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் பழங்கள், பிஸ்கட்டுகள் ஸ்டார் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.





0 Comments