பொய்கை ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொய்கை ஊராட்சிக்குட்பட்ட திரிபுரசுந்தரபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், மாவட்ட ஊராட்;சிக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாடு செல்லும் பாதையில் சுற்;றுச்சுவர் அமைப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான கனிமொழி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திமுக கிளை செயலாளர்கள் கடல் சுப்பிரமணியன், செல்லப்பா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரலிங்கம், காளிராஜ், சங்கரலிங்கம், சங்கர், திரிகூடபுரம் ஊராட்சி துணைத் தலைவர் செய்யது மீரான், செல்லத்துரை, ராஜா, பாதுஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments