கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயிலில் அமைந்துள்ள டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளி மற்றும் டி.ஜே.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து, விஜயதசமி விழாவையொட்டி வித்யாரம்ப எழுத்து நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அறிவின் தொடக்க நாளான விஜயதசமியில், மழலையர்கள் கல்விப் பயிலத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வாக வித்யாரம்பம் சீரிய முறையில் சிறப்பிக்கப்பட்டது மாலைகளுக்கு கல்வி புத்தகம் பேக் வழங்கினார்கள்.
இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் டி.ஜே.எஸ் கல்விக் குழுமத் தலைவர் மாண்புமிகு டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையேற்று, சிறுவர்களுக்கு மாலை அணிவித்து வித்யா ஆரம்பத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், டி.ஜே.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குநர் மற்றும் தாளாளர் டாக்டர் A. பழனி, டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளி இயக்குநர் மற்றும் தாளாளர் சமூகநற்பணிச் செம்மல் T.J.S.G. தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வின் முழு ஏற்பாடுகளையும் மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு. ஞானபிரகாசம் மற்றும் பப்ளிக் பள்ளி முதல்வர் சூ.கஸ்பார் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.சமூகத் தலைவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்து கொண்டு, சிறார்களின் கல்வித் தொடக்கத்தைச் சிறப்பித்தனர்.



0 Comments