மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில்,உலக அமைதி சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற போட்டி காவேரி நகரில் இருந்து தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலை பள்ளி வரை ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மயிலாடுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,தருமபுரம் ஆதீன மடாதிபதி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.கல்லூரி தாளாளர் திருநாவுக்கரசு, தலைமையாசிரியர் வேலுச்சாமி, உடற்கல்வி ஆசிரியர் துரை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0 Comments