ஈரோட்டில் தமிழ் உலகம் வழங்கும் அன்னலட்சுமி அன்னதானம் சேவை திட்டம் சார்பில் தொடர்ந்து 361 வது வாரம் அன்னதானம் வழங்கப்பட்டது


ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே தமிழ் உலகம் வழங்கும் அன்னலட்சுமி அன்னதானம் சேவை திட்டம் சார்பில் தொடர்ந்து 361 வது வாரம் நோயாளிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாதசாரிகளுக்கும் 100 க்கும் மேற்பட்டோருக்கு தண்ணீர் பாட்டலுடன் {சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன்} காலை சிற்றுண்டி இனிப்புடன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்உலகம் அன்னலக்ஷ்மி அன்தானம் குழு , ஒய்ஸ்மென் கிளப் ஆப் ஈரோடு டெக்சிட்டி, தாகம் தனிக்க தண்ணீர் தாரீர் அமைப்பினர் , சமூக ஆர்வலர் ஈரோடு சம்பத்நகர் ரவீந்திரன், ஜெகன் ராஜேந்திரன், சேவை இயக்குனர் ஒமே.ராமலிங்கம், தலைவர் ஒமே.பிரகாஷ், செயலாளர் ஒமே.அசோக், பேபி தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments