மயிலாடுதுறை: உயர் நீதிமன்ற உத்திரவு படி ரூ.4 கோடி மதிப்புள்ள கோயில் இடம் தனியாரிடம் இருந்து மீட்பு..... காவல் துறையினர் குவிப்பு


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் உள்ளது மன்மதீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான இடம்.இதில் தனியார் ஒருவர் கடையும் விடுதியும் கட்டி இருந்தார்.இவர் ஆலயத்திற்கு தொடர்ந்து வரி செலுத்தாமல் இருந்துள்ளார்.இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது ஆலயத்திற்கு அந்த இடமும் கட்டிடமும் சொந்தமானது என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

 இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரவிச்சந்திரன் தலைமையில்,ஆலய நிலங்கள் தனி வட்டாச்சியர் பாலமுருகன்,ஆகியோர் குத்தாலம் காவல்துறையினர் பாதுகாப்போடு ரூ 4 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை திருக்கோயில் வசம் சுவாதினம் எடுக்கப்பட்டது.அப்போது மன்மதீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் விமலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments