திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்..... அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.....

 


பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌.

 திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம்,  திருச்சி கிழக்குத் தொகுதி  மாநகராட்சி   மண்டலம் 2, வார்டு எண்14 கங்கு உட்பட்ட பகுதிகளில்  வசிக்கும் மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகம்  தெப்பக்குளம்  பிஷப் ஹுப்பர்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில்  நடைபெற்றது. 

அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார்.சொத்து வரி பெயர் மாற்றம் உத்தரவு ,புதிய சொத்து வரி விதிப்பு உத்தரவு, பட்டா உத்தரவு ஆகியவை இந்நிகழ்வில் வழங்கப்பட்டது‌‌ .

 மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில்  மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன்,   கிழக்கு தாசில்தார் விக்னேஷ், மண்டலம் இரண்டின் இணை ஆணையர் ஜெயபாரதி, பகுதி கழகச் செயலாளர்கள்  மோகன், வார்டு எண் 14 வட்டக் கழகச் செயலாளர்  இளங்கோ, உதயா ரஃபி, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

Post a Comment

0 Comments