அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்

 


மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏசியான் அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதன்படி, இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், ஏசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Post a Comment

0 Comments