பொன்னேரி: கோளூரில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் ஊக்கத் தகையும் வழங்கினார் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியும் பி.பலராமன்


திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,மீஞ்சூர் மேற்கு ஒன்றியத்தில் அடங்கிய கோளூரில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கோளூர்,நெல்வாயல்,வேளூர், நிஷாந்த் செலக்ட் உள்ளிட்ட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றது.14 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிப் போட்டியில் கோளூர் அணியும் நிஷாந்த் செலக்ட் அணியும் மோதியதில் நிஷாந்த் செலக்ட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டாவது அணிக்கான கோப்பையை கோளூர் அணி கைப்பற்றியது. 

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு. மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பைகளையும்,ரொக்க தொகைகளையும் வழங்கினார்.மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணாபுரம் வினோத்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார், அதிமுக நிர்வாகிகள் செல்வழகி எர்ணாவூரான், கோளூர் கிளை கழக நிர்வாகிகள் சிவா,பொன்னு வேல்,சதீஷ்,தண்டபாணி,நாகராஜ்,சாரங்கம்,பொன்னன் வழக்கறிஞர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.கிரிக்கெட் போட்டியினை சுடர் ஒருங்கிணைத்தார்.

Post a Comment

0 Comments