விலையும் கூடுதல்.... உப்பும் இல்லை , உரப்பும் இல்லை.... சமூக வலைதளத்தில் உயர்தர உணவகத்தின் மீது குற்றச்சாட்டு.....

 


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தரணி, ஸ் என்ற பெயரில் உயர்தர உணவகம் செயல்பட்டு வருவதாகவும், இங்கு ஒருவர் சாப்பிட சென்றதாகவும் அந்த சாப்பாட்டில் உப்பு இல்லை, உரப்பும் இல்லை, சுவையும் இல்லை, தரமும் இல்லை, இவைகளுக்கு ஒருவருக்கு இருநூறு ரூபாய் என வசூல் செய்வதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டிருக்கிறது, இன்னும் சற்று கூடுதலாக அப்பளமும் இல்லை, தொட்டுக்கொள்ள ஊறுகாயும் இல்லை, இது ஒரு வழிப்பறி என்றும், ஆதலால் இந்த ஹோட்டல் பக்கம் தயவுசெய்து யாரும் போகாதீங்க, என பதிவிடப்பட்டுள்ளது, இந்தப் பதிவின் மூலம் பெரும்பாலான உணவகங்களில் இது போன்று நிலை நீடிக்குமோ? என அச்சமும் எழுகிறது, நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவு பாதுகாப்பு துறை எங்கு சென்றது? எனக் கேள்வியும் எழுகிறது, இதுகுறித்து அப்பகுதியில் ஒருவர் கூறும் போது, பொதுவாகவே உணவகங்களில் விலைகளில் நிர்ணயம் என்பது இல்லை, உணவில் சுகாதாரமில்லை, தரமும் இல்லை, வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்போது, வேறு வழியின்றி உணவகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இவ்வாறு சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறிய அவர், கைகட்டி வேடிக்கை பார்க்கும் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.




Post a Comment

0 Comments