திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.
முதலாம் ராஜேந்திர சோழன் வடபுலம் சென்று திரும்பிய போது, பாலைவனம் மிகுந்த இந்த பகுதியில் தங்க நேர்ந்த போது, அவன்பால் அருள்கொண்ட இறைவன் அவன்மூலமாக ஜெயம்கொண்ட சோழமண்டலத்தில் திருபாலீஸ்வரராக தங்கி அருள்பாலித்து வருவதாகவும், தேவர்கள், அசுரரகள் பாற்கடலில் அமிர்தம் கடைந்து இந்த கோயில் குளத்தில் கை அலம்பிய நிலையில், இதுவரை இந்த கோயில் புஷ்கரணியில் தவளைகள் இல்லை என்பதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் கடந்த 25-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, சங்கல்பம் ஸ்ரீமகாகணபதி ஹோமம் தொடங்கி ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று பிரதான யாகசாலையில் விசேஷ ஹோமமும், நடைபெற்றது.
புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் மகர லக்னத்தில் ஆலய பரிவார மூர்த்திகளுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் ஸ்ரீலோகாம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் மற்றும் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி. ரெட்டம்பேடு.மெதூர் காட்டூர் , கோளூர்.திருப்பாலைவனம், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோபுர கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.அப்போது, நமசிவாய, ஹரஹர மஹாதேவா என பக்தர்கள் பக்தி பரவத்துடன் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை பயிர் கோட்ட வேளாண் மரபினர் செய்திருந்தனர் மரபுத் தலைவர் துரை மரபு செயலாளர் பூமிநாதன் மரபு ஆலோசகர் நாராயணன் மரபு பொருளாளர் இளங்கோவன் மரபுத் துணைத் தலைவர் விநாயகம் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் அறநிலைத்துறை அதிகாரிகள் இணை ஆணையர் அனிதா.. உதவி ஆணையர் சிவன் ஆனந்த்.சங்கரன். மாதவன். சந்திரசேகர். சுப்பிரமணி.. லட்சுமி நாராயணன். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ். அதிமுகவை சேர்ந்த மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பொன் ராஜா , ஒன்றிய செயலாளர் ஜி எஸ் வினோத்குமார், முத்துக்குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி சி மகேந்திரன், விவசாய பிரிவு ஜெயம் ரமேஷ், இலுபாக்கம் ரவி ,சுதாகர், ஒன்றிய விவசாய பிரிவு ஆறுமுகம் முன்னாள் அரசு வழக்கறிஞர் மகேந்திரன் மேலும் ஒன்றிய செயலாளர்கள் ராஜா முரளிதரன்.,, மெதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் திமுக தொண்டரணி முத்துக்குமார். நகர் செயலாளர்.ரவிக்குமார் ஆரணி முத்து.தொழிலதிபர் பரிமேலழகர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய துணை செயலாளர் டி சி மஸ்தான், டி ஜெ ஆறுமுகம், டி ஜெ டி தினேஷ், கிளிக்கொடி குமார், முன்னாள் கவுன்சிலர் வெற்றி , ஒப்பந்ததாரர் செந்தில் துரை, ஏ கே எஸ் சம்பத், ஏடிஎஸ் சந்தானம், சிமெண்ட் கடை மதி, புதுவாயில் சதீஷ், பெருவாயில் ராஜசேகர், பனபாக்கம் சீனிவாசன்.பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் ஊராட்சி செயலாளர்கள் தரணி. பாரதி .குருமூர்த்தி செந்தில். வெற்றி ஜெகன்.வழக்கறிஞர் காட்டவூர் இர. டேவிட் நிருபர் எம் சுந்தர். உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி சேர்ந்த 5000.க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.



0 Comments