கரூர் மாவட்டத்தில் தவெக கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டதால், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த நிலையில், உடல்நிலை காரணமாக அவர் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, அவர் அக்டோபர் 3ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
தற்போது பெலிக்ஸ் ஜெரால்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


0 Comments