விபத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்.... காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்....

 


மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாலையை ஓடி கடக்க முயன்ற போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்த பேருந்து மோதியதில் சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் நெற்றியிலும் முழங்கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நபர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். அந்நபர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

 இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோராத நிலையில் திருச்சி மாநகரம் போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு காவலர் சையது அபுதாஹிர் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக் கரை மயானத்தில் காவலர் சையது அபுதாஹிர் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

Post a Comment

0 Comments