வள்ளாலகரம் கூட்டுறவு நகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்..... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்......


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம் கூட்டுறவு நகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பழைமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது‌.‌இதனை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து கடந்த 24 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூரணாஹூதி செய்விக்கபட்டு புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளத்துடன் சென்று கோபுர கும்பத்தை அடைந்தனர்.அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் கூட்டுறவு நகரவாசிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகரை வழிபட்டு சென்றனர்.

Post a Comment

0 Comments