ஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திர சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்


ஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 

வருகின்ற 29.10.2025 புதன்கிழமை R.D இன்டர்நேஷனல் CBSE பள்ளியில், அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம் சார்பாக நடத்தப்படவுள்ளது. என்பதை மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா  தெரிவித்துள்ளார். 

15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்கள் ( ஆண், பெண் ) அனைவரும் பங்கு பெறலாம். பள்ளி, கல்லூரி, மன்றம் சார்பாக பங்கு பெற முடியும் என்று அவர் கூறினார். ஆண்கள் பிரிவில் கையுந்துபந்து (volleyball), 100 m ஓட்டம், சிலம்பம். பெண்கள் பிரிவில் கயிறு இழுத்தல், 100 m ஓட்டம், சிலம்பம். போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.


பதிவு செய்ய தொடர்பு கொள்ள : 


1). N. கதிரவன்

மாண்புமிகு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதாளர் 2024.

( தலைவர் - அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம்) 9655151995.


 2).N.கலைசெல்வன்

( NYV - MYB & செயலாளர் - அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம்) 7708877250.


செய்திகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்புக்கு:- 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .

Post a Comment

0 Comments