இந்து முன்னணி பேரியக்கத்தின் துணை அமைப்பான இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக அன்னதானம்

 


தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் இந்துமுன்னணி பேரியக்கத்தின் துணை அமைப்பான இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக விலங்கு கருப்பசாமி ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு   ஸ்ரீவிலங்கு  கருப்பசாமி திருக்கோயிலில் 16 ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது.1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர் .

அன்னதானத்தை இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் கோம்பை கணேசன் ,இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆச்சி.கார்த்திக்  துவக்கி வைத்தனர்.இந்துமுன்னணி மாவட்ட தலைவர் V.சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

விலங்கு கருப்பசாமி ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளர்  நலச்சங்கத் தலைவர் மாரிமுத்து ,துணைத் தலைவர் ராஜாங்கம் ,இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் பாண்டியன் பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் அருண்குமார்,மாதவன்,ஜெயமுருகன் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments