நாமக்கல்: கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த இளம்பெண்


 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்தவர் காளிமுத்து (27 வயது), டிரைவர். இவரது மனைவி சினேகா (24 வயது), இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகும் நிலையில் 5 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். தற்போது இவர்கள் குழந்தைகளின் படிப்புக்காக காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கப்பலூத்தூ கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் அஜித் (22 வயது). டிரைவரான இவர் காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள புளியங்காடு பகுதியில் வசிக்கும் அவரது சித்தி தீபா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அஜித்துக்கும், சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும், வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு சினேகா மற்றும் அஜித் இருவரையும் அழைத்து வந்து சமாதானம் செய்து அவரவர் வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சினேகா மற்றும் குழந்தைகள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் இருக்கும் காளிமுத்துவின் தங்கை பரிமளா என்பவரது வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் காளிமுத்து அவரது மனைவி சினேகா மற்றும் குடும்பத்தினர் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் முள்ளுக்குறிச்சியில் உள்ள அவரது தங்கையின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். 2 மணியளவில் சினேகாவின் மாமியார் ஜானகி (44 வயது) வந்து பார்த்தபோது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மீண்டும் அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது சினேகா தான் அணிந்திருந்த தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மாயமாகி இருப்பது ததெரியவந்தது

இந்த நிலையில் சினேகா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஜித் இருவரும் ராசிபுரம் அருகே உள்ள காட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். அப்போது பூ எடுக்கச் சென்ற அஜித்தின் தந்தை கந்தசாமி தனது மகனுடன் அருகில் ஒரு பெண்ணும் (சினேகா) விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்தார். அதன் பேரில் இருவரும் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments