வரிகளை வைத்தே அமைதியை ஏற்படுத்தும் அமெரிக்கா.... கொக்கரிக்கும் டிரம்ப்


 இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட உலக அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தாலும் டிரம்ப் மீண்டும் மீண்டும் இதே கருத்தை கூறி வருகிறார். இந்த நிலையில், போர்களை நிறுத்துவதற்கு வரிகளே காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது; அமெரிக்காவுக்கு மிக முக்கியமானதாக வரிகள் உள்ளன. வரிகள் காரணமாகவே நாம் அமைதியை ஏற்படுத்துபவராக உள்ளோம். வரிகள் காரணமாக பல பில்லியன் டாலர்கள் வருவாய் மட்டுமல்லாமல் அமைதியையும் ஏற்படுத்த முடிகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் முழு வீச்சில் போரிட தயாராக இருந்தார்கள். 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இரு நாடுகளுமே அணு ஆயுத வல்லமை கொண்டவை. இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்த நான் என்ன சொன்னேன் என்பதை சொல்ல முடியாது. ஆனால் நான் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உடனடியாக சண்டையை நிறுத்தினார்கள். இது வரி விதிப்பை அடிப்படையாக கொண்டே நடந்தது” என்றார்.

Post a Comment

0 Comments