மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு,கங்கை நகர் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இதில் மயிலாடுதுறை கூறைநாடு,கங்கை நகர் தெருவில் பூர்வீகமாக வசித்து வரும் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து வந்து தாங்கள் நிரந்தரமாக அந்த இடத்திலேயே வசிக்கவும்,அடிப்படை வாழ்வாதார உரிமைகள் செய்து கொடுக்ககோரி மனு அளித்தனர்.அம்மனுவில் கூறியிருப்பதாவது மயிலாடுதுறை கூறைநாடு,கங்கை நகர் தெருவில் வசித்து வரும் 40 கும்பத்தைச் சேர்ந்த நாங்கள் வீடுகட்டி குடித்தனமாக வசித்து வருகிறோம்.எங்கள் வாழ்வாதார குடியுரிமை தொடர்பான வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை,ஆதாரர் அட்டை, வங்கிகணக்கு,ஓட்டுரிமை ஆவணம் உள்ளிட்டவற்றை அரசிடமிருந்து பெற்றுள்ளோம்.எங்களுக்கான வாழ்வாதாரம் இந்த பகுதியில் தான் உள்ளது.எங்களின் பிள்ளைகள்,இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில்தான் படித்து வருகிறார்கள்.ஆகவே எங்களின் அடிப்படை வாழ்வாதாரம் வாழ்வுரிமைகள் இப்பகுதியை சுற்றித்தான் அமைந்துள்ளது.நாங்கள் குடியிருந்து வரும் பகுதி மூன்று தலைமுறையாக எங்கள் முன்னோர்கள் வசித்து வரும் பகுதியாகும்.
எங்களுக்கு அரசு கொடுக்கும் அனைத்து குடியுரிமை ஆவணங்கள் இருந்தும் குடிநீர்,மின்சாரம்,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.நாங்கள் தலைமுறைகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு அரசால் பட்டா ஆவணங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடமும், வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடமும் பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், அடிப்படை வசதிகள் எதுவும் அரசால் செய்துகொடுக்கப்பட வில்லை.
ஆகவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக கவனம் செலுத்தி,எங்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு மின்சாரம்,குடிநீர்,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்குவதற்கு உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடவேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments