மயிலாடுதுறை: தொழிற்கல்வி மாணவர்களுக்கான உள்ளுறை பயிற்சி நடைபெற்றது


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தொழிற்கல்வி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை வளர்க்கும் வகையில் அரசின் உயரிய திட்டமான "தொழிற்கல்வி மாணவர்களுக்கான உள்ளுறை பயிற்சி" மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தொழிற் கல்வி மாணவர்களுக்கான உள்ளுறை பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை வழிகாட்டுதலின்படி கடந்த ஆறாம் தேதி முதல் பத்து தினங்களுக்கு மயிலாடுதுறை சிஎஸ்சி கம்ப்யூட்டர் சென்டரில் துவங்கப்பட்டது.

 மாணவர்களுக்கு "ஜிஎஸ்டி பாடநெறி வேலைவாய்ப்பு திட்டத்துடன் கூடிய முழுமையான சான்று அளிக்கப்பட்ட கணக்காளர்" என்ற சிறப்புமிகு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பயிற்சி தொழிற்கல்வி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.அரசின் சிறப்பான இத்திட்டம் தொழிற்கல்வி மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமான திட்டம் ஆகும்.

Post a Comment

0 Comments