கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: “அரசியல் கூட்டம் நடத்தும் கட்சியினரே இடம் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்க வேண்டும். கரூர் கூட்டத்தில் எந்தவிதமான தண்ணீர், பிஸ்கட் போன்ற வசதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. கூட்டத்தில் திரண்டிருந்த மக்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டதால், அதனை கவனத்திற்கு கொண்டு வரவே சிலர் காலணிகளை வீசியிருக்கலாம்” என்றார்.
மேலும், “இது எவ்விதத்திலும் திட்டமிட்ட தாக்குதல் அல்ல. கூட்ட நெரிசலில் சிக்கிய மக்களின் கோரிக்கை வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும். விஜய் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தை அரசியல் நோக்கில் சிதைக்க வேண்டாம். இனி இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாத வகையில், அரசும் கட்சிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


0 Comments