திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட GN செட்டி தெருவில், வடக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில், விநாயகர் கோவில் எதிரில் சாலை முழுவதிலும் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு ஜல்லிகற்கள் பெயர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு சிறிதும் லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் மழைக்காலம் தொடங்கி விட்ட காரணத்தினாலும் பேரூராட்சி அதிகாரிகள் இங்கு மற்றும் ஆரணி முழுவதும் ரோடுகள் மராமத்து பணிகள் செய்து பொதுமக்கள், பள்ளி குழந்தைகள்,வாகன ஓட்டிக்கள் பயமின்றி பயணிக்க வழி வகை செய்து தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

0 Comments