உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, சனாதனத்திற்கு எதிராக நடப்பதாக தெரிவித்து வழக்கறிஞர் ஒருவர் செருப்பு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டன குரல்கள் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாசலில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர் சங்க தலைவர் வேலு குபேந்திரன்,மாயூரம் வழக்கறிஞர் சங்க தலைவர் முருகவேல் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர் இதன் காரணமாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அமைந்துள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம்,நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டன.
மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று செருப்பு வீச்சு சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

0 Comments