மங்கைநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அனந்தநல்லூர் மற்றும் பொரும்பூர் ஊராட்சிகளுக்கு சேர்த்து மங்கைநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் கலைஞர் காப்பீடு திட்டம்,மகளிர் உரிமை தொகை.முதியோர் உதவி தொகை.ஆதார் கார்டு பெயர் மாற்றம், வேளாண்மை இடு பொருள் பெறுதல். போன்ற திட்டங்களை மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இம்முகாம் நடைபெற்றது முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஷோபனா,வட்டாட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Post a Comment

0 Comments