கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நாளை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் தகவல்


ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்திற்கு கடந்த 20.10.2025 முதல் 21.10.2025 வரையில் கொடிவேரி அணையின் உபரி நீர், குண்டேறி பள்ளம் அணையின் உபரி நீரும் மற்றும் மழை நீரும் சேர்ந்து ஆற்றில் தண்ணீர் செந்நிறமாக சேரும் சகதியுமாக வந்தது. இதனால் மேற்படி நாட்களில் மின் மோட்டார்கள் இயக்கப்படவில்லை.

 தற்பொழுது 21.10.2025 அன்று மாலை 4 மணி நிலவரப்படி ஆற்றில் தண்ணீர் தெளிந்து வருவதால் தற்போது மின்மோட்டார் இயக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் குளோரின் கலந்து நகரின் அனைத்து மேல்நிலைத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு நாளை 22.10.2025 முதல் வழக்கமாக குடிநீர் விநியோகிக்க நகராட்சியின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரினை நன்கு காய்ச்சி பருகுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments