நாகை அருகே சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிதிலடைந்த கைலாசநாதர் ஆலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம்  கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் பொழுது  தர்மர் வழிபட்ட ஸ்தலம்   யவனர்கள் தங்கி வணிகம் செய்ததற்கான சான்று கல்வெட்டில் உள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள மூன்று கைலாசநாதர் கல்வெட்டு கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

 சுமார் 1050 ஆண்டுகளுக்கு பழமையான அருள்மிகு கைலாசநாதர் சிவாலயம் மிகவும் சிதிலடைந்து உள்ளே யாரும் சென்று பூஜை செய்ய முடியாத நிலையில் முட்புதர்களாலும்,மரங்களாலும் இருந்ததை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டை திருஆரூரான் உழவாரத் திருப்பணி அறக்கட்டளை  குழு 60 சிவனடியார்கள் தங்கள் உழவாரப்பணியின் வாயிலாக மரங்களையும் முட்புதர்களையும் நீக்கி உள்ளே சென்று பூஜை செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

  மேலும் தமிழக அரசு   நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான முன் ஏற்பாடுகளை வழிவகுத்து  செய்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை செய்தியாளர்: ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments