முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், படத்தின் பிசினஸ் அறிவிப்பு வந்த நாள் முதலே அமோகமாக நடைபெறும். குறிப்பாக, தளபதி விஜய் அவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை அளவிடவே முடியாது.அந்த வகையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் ப்ரீ பிசினஸ் (Pre-Business) தற்போது சாதனை அளவில் நடைபெற்று வருகிறது.
இதுவரை OTT உரிமை ரூ. 110 கோடி, தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ. 115 கோடி மற்றும் ஆடியோ உரிமை ரூ. 35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 260 கோடி பிசினஸ் ஆகியிருந்தது.இந்த நிலையில், தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் வட அமெரிக்கா (North America) உரிமை ரூ. 24 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது விஜய் படங்களுக்கே உரிய மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ. 284 கோடி பிசினஸ் செய்துள்ளது. வட அமெரிக்காவில் இப்படம் $5.75 மில்லியன் (சுமார் ரூ. 50 கோடி) வசூல் செய்தால் மட்டுமே, வாங்கியவர்களுக்கு பிரேக் ஈவன் (Break Even) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments