தூத்துக்குடி: கார் மரத்தில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலி

 


தூத்துக்குடி அரசு மருத்துவ  கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களான முகிலன் (வயது 23), ராகுல் ஜெபஸ்டின், சாரூபன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.தூக்கக் கலக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது அதிவேகத்தில் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments