![]() |
சவூதி அரேபியாவில், மக்காவுக்குப் புனிதப்பயணம் சென்ற இந்தியப் பயணிகள் ஏற்றிச் சென்ற பேருந்து மீது டீசல் லாரி மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 42 இந்தியர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்திலிருந்து சென்ற புனிதப் பயணிகள் மக்காவில் தங்களது புனிதச் சடங்குகளை முடித்துக்கொண்டு, மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின்போது பேருந்தும், டீசல் லாரியும் மோதியதில் தீப்பிடித்துக் கொண்டது எனவும், அப்போது பேருந்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கோர விபத்தில் உயிரிழந்த 42 இந்தியப் பயணிகளில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகளும் அடங்குவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. புனிதப் பயணம் சென்ற இடத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், ஐதராபாத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments