பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பத்தில் கூட்டுறவு துறை சார்பில் சுமார் 6 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

 


கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் முடிய ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும்,கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.அதன்படி திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பத்தில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

இதில் பனப்பாக்கம்,மெதூர்,தேவம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள 122 உறுப்பினர்களுக்கு சுமார் 6 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டிலான  மீன் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் கடனுதவி, மகளிர் சுய உதவிக் குழு கடனுதவிகள்,பயிர் கடன் உதவி,மத்திய கால கடன்,கால்நடை வளர்ப்பு கடன், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மண்டல கூட்டுறவு துறையும்,மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவ கல்லூரியும் இணைந்து மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பழவேற்காடு கடற்கரை பகுதியில் மரச்செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் மீனவ மகளிருக்கான கோலப்போட்டிகள்,கயிறு இழுக்கும் போட்டிகள்,ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும்,விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் திருவள்ளூர் மண்டல கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வழங்கினார்.

பொன்னேரி சரகர் துணைப்பதிவாளர் சரவணன் வரவேற்புரையில் திருவள்ளூர், திருத்தணி துணை பதிவாளர்கள்,பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த்,திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ்,பழவேற்காடு மீன்வளத்துறை ஆய்வாளர் பாரதிராஜா, சார்பதிவாளர் கள் மீஞ்சூர் பிரபு,கும்மிடிப்பூண்டி கல்பனா,பனப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் திருப்பதி,மெதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல் அலுவலர் சசிகுமார்,தேவம்பட்டு சுமதி,தேவதானம் பொன்னன், கம்மவார் பாளையம் சசிகுமார்,பொன்னேரி யுவராஜ்,வெள்ளக்குளம் ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள்,அரசு துறை அதிகாரிகள், அரங்கங்குப்பம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments