திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியம் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி வகுப்பறை கட்டிடம்.கட்ட (நம்ப ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி )NSNOP திட்டத்தின் கீழ் CSR பண்டு மூலம் ரூ 1.21 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இணைய வழி மூலம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆரணி மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை E.காவேரி தலைமை தாங்க M.ஹேம பூசணம் PTA தலைவர் K. N.சீனிவாசன் PTA பொருளாளர் Dr G. ரவிச்சந்திர பாபு PTA உறுப்பினர் M. நந்தினி SMC தலைவி S. ஜீன் ரவி,SMC கல்வியாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க, கிழக்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் M. S. K.ரமேஷ் ராஜ் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி ஆரணி நகர திமுக செயலாளர் P.முத்து தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் M.ராஜேஸ்வரி துணைத்தலைவர் K.சுகுமார் MABL திமுக நகர பொருளாளர் கு.கரிகாலன்,தலைமை ஆசிரியை E.காவேரி ஆகியோர் பூமி பூஜை செய்து முதல் கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர் இவ்விழாவில் SMC துணைத் தலைவர் K.டில்லி,இருபால் ஆசிரியபெருமக்கள்,மற்றும் நகர திமுக நிர்வாகிகள் சாலேக்,L.உதயகுமார் J. மகேந்திரன் சந்தோஷ் பிரபா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



0 Comments