திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ₹5.95 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் பிரபாகரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி, திட்ட அலுவலர் சரவணன் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கும்மிடிப்பூண்டியின் முதல்வர் ராஜலட்சுமி மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.


0 Comments