எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் சமாதானம்..... இணையத்தில் வட்டமடிக்கும் டிரம்ப் மீம்ஸ்.....

 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அஇஅதிமுக.வில் அவ்வபோது பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றம், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா வெளியேற்றம், யாரும் எதிர்பாரா வகையில் முல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி என அவ்வபோது கட்சிக்குள் பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது.இந்த வரிசையில் தற்போது புதிய வெடி வெடித்துள்ளது. கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்லி அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு பணிகளை பொதுச்செயலாளர் 10 தினங்களில் மேற்கொள்ளவில்லை என்றால் நானே அந்த பணிகளை செய்வேன் என்று கூறி அதிரடி காட்டினார். 

அதிரடிக்கு நான் சலைத்தவன் இல்லை என்று சொல்லும் வகையில் செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சிப் பதவிகளையும் பறித்து அதிரடி காட்டினார்.இந்நிலையில் அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி நான் ஒருங்கிணைப்பு பணியைத் தொடங்கிவிட்டேன் என்பதை வெளிப்படுத்தினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்திய நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையேயான மோதல் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இணையவாசிகள் தங்கள் பாணியில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரிடையேயான மோதலை நிறுத்தி வைப்பது போல் வெளியான மீம் கவனம் ஈர்த்துள்ளது.

Post a Comment

0 Comments