தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 231 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய  வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள்  என மொத்தம் 231  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் , பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

 இக்கூட்டத்தில்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்  தலா  ரூ.14,490/- மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை  காது கேளாத மற்றும்  பார்வையற்ற 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5,203/- மதிப்பிலான தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும், தலா ரூ.8,781/- மதிப்பிலான தேய்ப்பு பெட்டி 5 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார்,   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, உள்ளிட்ட அலுவலர்கள்  பலர்   கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments