வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் அ.டயானா சர்மிளாவுக்கு நூலக ஆர்வலர் விருது

 


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் அ.டயானா சர்மிளா வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் உறுப்பினர், புரவலர் மற்றும் வாசகர் வட்ட தலைவராக உள்ளார். அவர் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் தேர்வு குழுவால் சிறந்த வாசகர் வட்ட தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நூலக  ஆர்வலர் விருது  சான்றிதழ் கேடயம்  வழங்க பாராட்டினார். 

நிகழ்வில் அரசு முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை பீ. சந்திரசேகரன் மற்றும் பொது நூலக இயக்குனர் திருமதி எஸ். ஜெயந்தி, பொது நூலக இணை இயக்குனர்  எஸ். இளங்கோ சந்திரகுமார், சென்னை மாநகர நூலக ஆணை குழு தலைவர் மனுஷ்ய புத்திரன், பொது நூலக துணை இயக்குனர் எம். தனலட்சுமி வேளாங்கண்ணி கிளை நூலகர் சி. தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments