தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்கள் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை 170-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே கூட்டணியை பலப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி, சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், 10-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments