பிரசித்திபெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எவ்வளவு.?

 


திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில்,சூரசம்ஹாரம், திருகல்யாணம் முடிந்து ஆலய வளாகத்தில் இன்று உண்டியல் எண்ணும் பணி  தொடங்கியது. திருக்கோயில் பணியாளர்கள், பொது மக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் 81,01,715 உண்டியல் பணமும்,89 கிராம் தங்கம்  5.9 கிலோ வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக  கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு பின்  இரண்டரை மாதங்களில் உண்டியல் எண்ணப்பட்டு 81 லட்சம் காணிக்கையாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் திருத்தணி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் விஜயகுமார் உதவி ஆணையர் சிவனானம் திருக்கோவில் நிர்வாக அதிகாரி மாதவன் கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments