திருக்குவளை அருகே பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம்


கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் பள்ளிக்கூட தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மழை நீர் வடிவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மேலும் எட்டுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றியும் காம்பவுண்டு உள்ளேயும் மழை நீர் தேங்கியுள்ளது.

 இவற்றை தற்போது வடிவதற்கும் எதிர்காலத்தில் அந்தப் பகுதியை மேடாக்கிடவும் சம்பந்தப்பட்ட துறையில் உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியர் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில உறுப்பினர் ஒன்றிய கவுன்சிலர் டி செல்வம் நேரில் சென்று பார்வையிட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு எடுத்த படம் உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் ஜி சங்கர் எட்டுக்குடி சேர்ந்த கண்ணதாசன் ஜெயராமன் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 


Post a Comment

0 Comments