தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சி , வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவலர் உமா சுந்தரி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரியகுளம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பவர் சக்தி என்பவர் நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துகிருஷ்ணன், மற்றும் அலுவலக பணியாளர்கள், நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பவர் சக்திக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர்:மு. அழகர்




0 Comments