தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி பகுதியில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அறிவுறுத்தலின்படியும், தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நல்லதம்பி ஆலோசனையின் பேரிலும், தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டது.
திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் பல்வேறு காரணங்களால் வந்து செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர். தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் பயணத்திட்டம், கலைஞர் கனவு இல்ல திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு திட்டம், மற்றும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அதனால் மக்கள் எவ்வகையில் பயன் பெறலாம் என்பது குறித்த விபரங்கள் இந்த புகைப்பட கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த புகைப்பட கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

0 Comments