மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பயிலும் 0-18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு குத்தாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் குலசேகரதாசன்,வட்டார கல்வி அலுவலர்கள் குமார்,நாகராஜன் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக நடத்தினர்.முகாமில் சிறப்பு மருத்துவர்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.



0 Comments